சொந்த வீடு பாக்கியம் அருளும் முருகன் மந்திரம்!


சொந்த வீடு, நிலம், தோட்டம் வாங்க வேண்டும் என்ற அனைவருக்கும் உள்ளது. இதற்கான முயற்சிகள் செய்தும் நல்ல வீடு, மனை அமையாமல் அல்லல் படுபவர்கள் அதிகம். இவர்கள் முருகனுக்கு உரிய மந்திரத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

தேய்பிறையிலிருந்து 15 நாட்களுக்கு வளர்பிறையில் இந்த மந்திரத்தைச் சொல்லி பரிகாரம் செய்ய வேண்டும். முருகனுக்கு நம் கையால் கட்டிய அறுகம்புல் மாலையைப் போட்டு பின் வரும் மந்திரத்தை சொல்ல வேண்டும். முருகனுக்கு நெய்யில் தீபம் ஏற்றி, நைவேத்தியமாகப் பேரீச்சம் பழத்தை வைக்க வேண்டும்.

மந்திரம்:

ஓம் மங்கள கார்த்திகேயா

சரவணபவா ஹ்ரீம் காரிய

சித்திதராயே நமோ நம!

இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து, வளர்பிறை நாட்களில் 15 நாட்களுக்கு தினமும் 27 முறைக்கு மேல் சொல்ல வேண்டும். நம்முடைய தோஷங்கள் நீங்கி, வீடு, மனை சொத்து வாங்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்.

Previous Next

نموذج الاتصال