சொந்த வீடு வாங்க ஒவ்வொரு ராசியினர் எந்த தெய்வத்தை வணங்கலாம்


மனிதராய் பிறந்த பலரின் கனவாக இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது. அதற்கான குருவி சேர்ப்பது போல சிறிது, சிறிதாக பணத்தை சேர்த்து வைத்து வாங்க முயல்வார்கள். இருப்பினும் வாழ்க்கையில் பல விஷயங்கள் சாதகமற்றதாக அமைந்து சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுகிறது.

சொந்த வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அதை பெறுவதற்கு அதற்குரிய தெய்வங்களை வணங்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் வழிபட்டால் நாம் பிரார்த்தனை செய்தது போன்று சொந்த வீடு கிடைக்கப் பெறலாம்.

சொந்த வீடு வாங்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?

எந்த ராசியாக இருந்தாலும் முருகப்பெருமானைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீடு, மனை வாங்கும் யோகம் வாய்க்கப் பெறலாம்.

கிரகங்களில் செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுகிறார். செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். அதனால் தான் எந்த ராசியினராக இருந்தாலும் முருகனை வழிபட்டால் செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதே போல ஒவ்வொரு ராசியையும் ஒரு கிரகம் ஆள்கிறது. இந்த கிரகங்களுக்குரிய இஷ்ட தெய்வங்களை நாம் வழிபடுவது அவசியம். அப்படி நாம் பிரார்த்தனை செய்து வழிபட்டால் நாம் நினைத்தபடி சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம்.

வீடு வாங்க ஒவ்வொரு ராசியினரும் வழிபடவேண்டிய தெய்வங்கள் :

மேஷ ராசி - அம்பாள்

ரிஷப ராசி - சிவபெருமான்

மிதுன ராசி - மகாவிஷ்ணு

கடக ராசி - அம்பாள்

சிம்ம ராசி - முருகப் பெருமான்

கன்னி ராசி - காவல் தெய்வங்கள் மற்றும் சித்தர்கள்

துலா ராசி - விநாயகப் பெருமான்

விருச்சிக ராசி - பைரவர் மற்றும் காவல் தெய்வங்கள்

தனுசு ராசி - முருகப் பெருமான்

மகர ராசி - அம்பாள்

கும்ப ராசி - குலதெய்வம் மற்றும் காவல் தெய்வங்கள்

மீன ராசி - மகாவிஷ்ணு

Previous Next

نموذج الاتصال