சிறுவாபுரி முருகன் கோவில் - சொந்த வீடு கட்ட பணம் இல்லையா, இந்த எளிய மந்திரம் உச்சரிக்கவும்!


நம்மில் பலருக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அதற்கான வசதி வாய்ப்பு இருக்காது. தன்னுடைய வருமானம் வயிற்றுக்கு சரியாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு ஏது சொந்த வீடு கனவு நிறைவேற என்ற கேள்வி எப்போதும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

பணம் ஏதும் இல்லாதவர்கள் கூட சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு ஒருமுறை சென்று வருவது மிகவும் சிறப்பானது.

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்து உங்கள் குறையை கூறி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்

அப்படி சொந்த வீடு, கட்ட வேண்டும் என முருகனிடம், வேண்டிக் கொண்டு இந்த ஆலயத்துக்கு சென்று சிற், சிறு கற்கலை அடுக்கி வைத்துவிட்டு வந்தாலே உங்களின் கனவு நிறைவேறும் என்பது ஐதீகம்.

வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல், திருமணம் ஆகாத நபர்கள் இந்த கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வந்தால் விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்பது நம்பிக்கை.

கோயிலின் சிறப்பு:

இந்த கோயில் முருகன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி வழிபட்ட சிறப்பு வாய்ந்தது. இங்கு ஒரு முறை சென்று சிறுவாபுரி முருகப்பெருமா னை தரிசனம் செய்து அவர் மீது பாடப்பட்ட திருப்புகழை பாராயணம் செய்யலாம். அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானை நினைத்து நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்த பக்தி பதிகத்தை மனமுருக உச்சரிக்கலாம்.

இப்படி செய்வதோடு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற உங்கள் வேண்டுதலை வைக்கவும். நீங்கள் வீடு கட்டி குடிபோகும் வரை முருகப்பெருமானை நினைத்து தினமும் இந்த பதிகத்தை பாராயணம் செய்யவும்.

உங்களிடம் சொந்த வீடு கட்ட எந்த ஒரு வாய்ப்பு, வசதியும் இல்லை, கையில் ஒரு பைசாவும் சேமிப்பில் இல்லை என நினைப்பவர்கள் கூட நம்பிக்கையோடு இந்த திருப்புகழ் பதிகத்தை உச்சரித்து வாருங்கள். உங்களின் பொருளாதார நிலை உயர்ந்து உங்கள் ஏழ்மை நிலை மாறி, வீடு கட்டுவதற்கான சிறப்பான சூழல் ஏற்படும். நிச்சயம் உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பதிகம் இதோ!

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி …… வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய …… முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.

நீங்கள் சொந்த வீடு கட்டும் வரை அல்லது வாங்கும் வரை முருகா உன்னை விடமாட்டேன் என நம்பிக்கையோடு இந்த பதிகத்தை தினந்தோறும் உச்சரிப்பது வாருங்கள். சொந்த வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழுங்கள்.

கோயில் அமைந்துள்ள இடம்:

சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இந்த கோயிலுக்கு மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர்.

Previous Next

نموذج الاتصال